நள்ளிரவில் போஸ்டர் ஒட்டிய ரசிகர்…! நேரில் பார்த்த விஜய் என்ன செய்தார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. விஜய் தனது ரசிகர்களுக்கு அவ்வப்போதும் அறிவுரை வழங்கி கொணடே இருப்பார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் நடிகர் விஜய்யின் பேச்சு ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியாகவே அமையும். அந்த அளவிற்கு நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மீது மிகுந்த அக்கறையுடன் இருந்து வருகிறார்.இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் விஜய் ரசிகர் மன்றத்தின் முக்கிய நபரும் இளைஞர் அணி தலைவருமான இ சி ஆர் சரவணன் நடிகர் விஜயுடன் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சரவணன் பேசுகையில், தளபதி எப்போதும் படம் வெளியாகும் ஒரு நாள் முன்பு அணைத்து திரையரங்கிற்கு ஒரு ரவுண்டு அடிப்பார். அப்போது காவலன் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் இரவு 2 மணிக்கு நான் போஸ்டர் ஓடிக்கொண்டிருந்தேன்.அப்போது அந்த வழியாக காரின் தளபதி வந்த போது நான் போஸ்டர் ஒட்டியதை பார்த்து காரை நிறுத்திவிட்டார்.

நான் உடனே கையில் கம்முடன் அவர் கார் முன்னாள் போய் நின்றதும் , என்ன பண்றீங்க 2 மணி போஸ்டர் ஒட்டிக்கிட்டு இருக்கீங்க. வீட்டுக்கு போங்க டைம் ஆகுது என்றார்.அதற்கு நான், இல்லைனா படம் ரிலீஸ் ஆகுமானு தெரில என்று கண்கலங்கி அவரிடம் பேசினேன்.

பின்னர் அவரும் கொஞ்சம் கலங்கியவாறு ‘படம் கண்டிப்பா வெளியாகும் இப்போ வீட்டுக்கு போங்க என்று கூறினார். அவர் என்னிடம் காரை நிறுத்தி பேச வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், தனது ரசிகருக்காக அவர் இதனை செய்தார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*