பொது கழிப்பறையில் 2 ஆண்டுகளாக தங்கியிருந்த இளம் விதவை பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்

இந்தியாவில் பொது கழிப்பறையில் தனது 2 மகள்களுடன் தங்கி வந்த விதவை பெண்ணுக்கு விரைவில் சொந்த வீடு கட்டி தரப்படவுள்ளது.கர்நாடக மாநிலத்தின் மாண்டியாவை சேர்ந்த நிர்மலா. இவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார்.இதன் பின்னர் தங்க இருப்பிடம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட நிர்மலா பொது கழிப்பறையில் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். சிறு சிறு வேலைகள் செய்து அதில் வரும் வருமானம் மூலம் வாழ்க்கையை ஓட்டி வந்தார் நிர்மலா.நிர்மலாவுக்கு அரசாங்கம் சிறிய அளவிலான நிலத்தை ஒதுக்கிய போதும் பண வசதி இல்லாததால் அவரால் வீடு கட்டி கொள்ள முடியவில்லை.இந்நிலையில் நிர்மலாவின் நிலை குறித்து அறிந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் அவரை பேட்டி எடுத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பின.

இதையடுத்து அரசு அதிகாரிகள் நிர்மலாவுக்கு உதவ முன்வந்தனர். முதற்கட்டமாக வாடகை வீட்டில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளார் நிர்மலா.இதற்கான மூன்று மாத வாடகை முன்கூட்டியே கொடுக்கப்பட்டுள்ளது.இதோடு, இன்னும் மூன்று மாதங்களில் பசாவா யோஜனா என்ற அரசாங்க திட்டத்தின் கீழ் நிர்மலாவுக்கு சொந்த வீடு கட்டி தர முடிவு செய்யப்பட்டுள்ளது.அவரது புகைப்படம் இதோ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*