மீண்டும் போன் பிரச்சினையில் சிக்கிய சிவகுமார்…. இந்தமுறை என்ன நடந்ததுனு நீங்களே பாருங்க!

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நடிகர் சிவகுமார், பொது நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபி எடுக்க வந்த இளைஞரின் செல்போனை தட்டி விட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.இந்த வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் தீயாக பரவ நடிகர் சிவகுமார் மீது பல்வேறு நெட்டிசன்களும் தங்களது கண்டனத்தையும், வருத்தத்தையும் தெரிவித்தனர். அதன் பின்னர் நடிகர் சிவகுமாரும் தனது தவறுக்கு மன்னிப்பும் கோரியதோடு பாதிக்கப்பட்ட அந்த இளைஞருக்கு புதிய போனையும் வாங்கி கொடுத்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகுமாரின் மற்றும் ஒரு வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் பத்திரிகையாளர்களிடம் சிவகுமார் பேசிக்கொண்டு இருக்கும் போது கூட்டத்தில் ஒரு செல்போன் சத்தம் கேட்கிறது. அதை கேட்டதும் பேச்சை நிறுத்திய சிவகுமார், அந்த நபரிடம் செல் போனை அணைக்கும்படி கோபத்துடனும், முறைத்தபடியும் கூறியுள்ளார்.