தேர்வு எழுத சென்ற பெண்ணிற்கு காதலனின் கண்ணெதிரிலேயே அரங்கேறியே விபரீதம்..!!

கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதி முடிந்துவிட்டு காதலனுடன் மோட்டார் சைக்கிளில் வந்த காதலி பேருந்து விபத்தில் காதலன் கண்முன்னே தலை நசுங்கி உயிரிழந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.பார்கவி (22) என்ற மாணவி சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பார்கவியும், அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை (24) என்பவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி, தங்களது காதலை வளர்த்து வந்தனர். இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய இரு வீட்டு பெற்றோரும், பார்கவியின் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதனிடையே டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு எழுதுவதற்காக நேற்று காலை பார்கவியை, ராஜதுரை தனது மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் பி.முட்லூர் அரசு கல்லூரிக்கு அழைத்து வந்தார்.மதியம், தேர்வு முடிந்ததும் ராஜதுரை, பார்கவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சிதம்பரம் நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது, தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில், பேருந்தின் பின்சக்கரம் பார்கவியின் தலையில் ஏறி, இறங்கியது. இதில் தலைநசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜதுரை காயங்களுடன் உயிர் தப்பினார்.

காயமடைந்த ராஜதுரை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பொலிசார், பார்கவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*