மகன் வயது பையனுடன் உறவில் இருக்கும் நடிகை… ஆனால் அது மட்டும் கிடையாதாம்!… ஷாக் ரிப்போர்ட்!

தன்னை விட 15 வயது குறைவான, விளம்பர மாடல் ரோஹ்மன் ஷாலை காதலிப்பது உண்மை என்றும், ஆனால், திருமணம் குறித்து வெளியாகும் செய்தியில் உண்மையில்லை என்றும், முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் தெரிவித்திருக்கிறார். ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்துள்ள சுஷ்மிதா சென், தமிழில், ரட்சகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 42 வயதாகும் சுஷ்மிதா சென், இரண்டு பெண் குழந்தைகளை, முறையே, 2000, 2010ஆம் ஆண்டு தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

27 வயதான ரோஹ்மன் ஷாலுடன் தாம் மிகவும் நெருங்கி பழகினாலும், இருவருக்கும் திருமணத்தில் இஷ்டமில்லை என்று சுஷ்மிதா சென் கூறியிருக்கிறார்.அவர்களது புகைப்படம் இதோ