
இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில்., நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ராட்சசன்’. பிரபல காவல்துறை உயர் அதிகாரி ரமேஷ் குடாவ்லாவின் மகனான நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி நடித்துவருகிறார். இவர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களான அன்புள்ள ரஜினிகாந்த், செல்வி, வள்ளி போன்ற படங்களை இயக்கிய கே நட்ராஜ் அவர்களின் மகளான ரஜினி நட்ராஜை கடந்த 2010 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு ஆர்யன் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் இவர் சமீபத்திய ட்விட்டர் பதிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளகியுள்ளது. அதில் அவர் நானும் ரஜினியும் ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்ததாகும். தற்போது விவாகரத்து பெற்று விட்டதாகவும் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு இதோ
— VISHNUU VISHAL – VV (@vishnuuvishal) November 13, 2018