வெளிநாட்டிலிருந்து கணவருடன் ஊருக்கு திரும்பிய இளம் மனைவி செய்த அதிர்ச்சி செயல்..! விபரீத சம்பவம்

கணவருடன் வெளிநாட்டில் தங்கியிருந்த பெண் சொந்த ஊருக்கு திரும்பிய உடன் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹர்ஷிதா (32). திருமணமான இவர் தனது கணவருடன் வசித்து வந்தார்.இந்நிலையில் ஹர்ஷிதாவின் கணவருக்கு அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைத்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹர்ஷிதாவையும் அங்கு அழைத்து சென்றார்.இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருவரும் சொந்த ஊருக்கு திரும்பினர். இந்நிலையில் நேற்று தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து ஹர்ஷிதா தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஹர்ஷிதாவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.

ஹர்ஷிதாவின் சடலத்தை பார்த்து அவர் குடும்பத்தார் கதறி அழுதார்கள். பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் ஹர்ஷிதா சில காலமாக மன அழுத்தத்தில் இருந்ததும், அதற்கான சிகிச்சையை பெற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் விதமாக ஹர்ஷிதா இறந்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*