புதிதாக பூப்பெய்திய சிறுமி… முட்டாள் தனமான சடங்குகளால் உயிரை விட்ட பரிதாபம்.. நடந்ததை நீங்களே பாருங்கள்!

பெற்றோர் மற்றும் உறவினர்களின் மூடநம்பிக்கையான சடங்குகளால் பட்டுக்கோட்டையில் ஏழாவது படிக்கும் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். கஜா புயலால் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஒருவரின் இறப்பு அங்குள்ள பகுதியினர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏழாம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி சமீபத்தில் பூப்பெய்தியதால் அவருக்கான சடங்குகளை செய்த பெற்றோர், பழங்கால வழக்கப்படி அந்தப் பெண்ணை தனியாக தங்கள் தென்னந்தோப்பில் உள்ள ஒரு குடிசையில் தங்க வைத்துள்ளனர்.

அன்றிரவு கஜா புயல் கரையைக் கடக்கும்போது வீசிய சூறைக்காற்றால் சுற்றியிருந்த தென்னை மரங்கள் சாய்ந்து சிறுமி தங்கியிருந்த குடிசை மீது விழுந்துள்ளது. மறுநாள் காலையில்தான் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த குடிசைக்கு சென்று பார்த்து, அவரை மீட்டுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பே மாணவி உயிரிழந்துள்ளார். பழங்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த முட்டாள் தனமான சடங்குகளை கண்மூடித்தனமாக பின்பற்றியதால் தற்போது தங்கள் ஆசை மகளை இழந்து பெற்றோர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த சோக சம்பவத்தால் அந்த ஊரே தற்போது வேதனையில் ஆழ்ந்துள்ளது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*