மனைவியை பழிவாங்க கணவன் செய்த மோசமான செயல் – திடுக்கிடும் சம்பவம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் முதன்மை ஆட்சேர்ப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார் 38 வயதான அந்த நபர். இவரிடம் இருந்து இரண்டு மொபைல் போன்களும் சில சிம் கார்டுகளையும் நொய்டா செக்டர் 20 பகுதி பொலிசார் கைப்பற்றியுள்ளனர். கடந்த 13 ஆம் திகதி குறித்த நபரின் மனைவி தமது மொபைலில் ஆபாச புகைப்படங்கள் தொடர்ந்து கிடைக்கப்பெறுவதாகவும், மட்டுமின்றி.

தமது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பாலியல் தொடர்பான வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.இச்சம்பவத்தை அடுத்து மாயமான அந்த நபர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவரை பொலிசாரால் நெருங்க முடியவில்லை, இந்த நிலையில் குறித்த பெண்மணிக்கு புகைப்படங்களை அனுப்பிய மொபைல் எண்ணை கண்டுபிடித்த பொலிசார்.

அவர் குடியிருப்பில் இருக்கும் நேரம் பார்த்து சென்று கைது செய்துள்ளனர்.அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 2011 ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்பதும்.

ஆனால் கடந்த 10 மாத காலமாக இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையிலேயே மனைவியை பழி வாங்கும் நோக்கில் அவரது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*