கஜா புயல் கோரத்தாண்டவம்: ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர் ரஹ்மான் என்ன உதவி செய்கிறார் தெரியுமா?

கனடாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், கனடாவின் டொரண்டோவில். டிசம்பர் 24-ஆம் திகதி தான் நடத்தும் இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட் இதோ

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*