விளம்பரத்தில் கலக்கும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்: கஜா புயலுக்கு அள்ளி கொடுத்தது எவ்வளவு தெரியுமா?

சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் முதல்வரின் கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் புரட்டி போட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சினிமா நட்சத்திரங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் நிவாரண உதவி செய்து வருகிறார்கள். அந்த வகையில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 1 கோடி நிவாரண உதவியாக வழங்கியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நிதியுதவியை அளித்துள்ளார் அருள்.

தற்போது டிவி-க்களில் டாப் 5-ல் இடம்பிடித்துள்ளது சரவணா ஸ்டோர் விளம்பரங்கள் தான். பெரிய பெரிய நடிகர்களை வைத்து விளம்பரங்கள் எடுக்கப்பட்டு வந்தநிலையில், திடீரென தன் கடை விளம்பரத்தில் மாடலாக தானே களமிறங்கி அசத்தியவர் சரவணா ஸ்டோர் ஓனர் அருள். இவர் நடித்த விளம்பரங்கள் முதலில் கிண்டலுக்கு ஆளானாலும் பின்னர் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*