மனைவியை பழிதீர்க்க நண்பர்களை வைத்து கணவன் செய்த கேவலமான செயல்

வேலூரில் மனைவி மீது உள்ள வன்மத்தால் கணவன் தனது நண்பர்களை விட்டு மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரை சேர்ந்தவன் குமார். இவனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆனது முதலே கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது சண்டை இருந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த உமா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குமாரை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் மனைவியை பழிதீர்க்க நினைத்த சைக்கோ குமார், தனது மனைவியின் செல்போன் நம்பரை தனது நண்பர்களிடம் கொடுத்து ஆபாசமாக பேசுமாறு கூறியுள்ளான். அவ்வாறே அவனது நண்பர்களும் செய்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த உமா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் போலீஸார் அந்த சைக்கோ குமாரை கைது செய்து விசாரணை நடத்தி. இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*