பிரபல நடிகர் விஜய் 2வது திருமணம்: முதல் மனைவி பொலிஸில் புகாரளித்ததால் எழுந்த சர்ச்சை

பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரபல கன்னட நடிகரான துனியா விஜய்க்கு, நாகரத்னா என்ற மனைவியும், 19 வயதில் மோனிகா என்ற மகளும் உள்ள நிலையில், கடந்த 2016ம் ஆண்டு கீர்த்தி என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். துனியா விஜய் பெங்களூரில் கிரி நகரில் ஒரு வீடு எடுத்து தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் வசிக்க ஆரம்பித்தார். இதனால் இரு மனைவிகளுக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

சமீபத்தில் கூட, துனியா விஜய் இல்லாத சமயம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்த நாகரத்னா, தன்னுடைய மகளுடன் சேர்ந்து கீர்த்தியின் தலைமுடியை பிடித்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இதில் காயமடைந்த கீர்த்தி, மோனிகா மற்றும் அவருடைய அம்மாவின் மீது பொலிஸில் புகார் அளித்தார். இந்த சம்பவம் கேட்டு ஆத்திரமடைந்த துனியா விஜய், மகள் மோனிகாவை அடித்ததாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து மோனிகா கொடுத்த புகாரின் அடிப்படையில், துனியா விஜய் மீது 5 பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவருடைய முதல் மனைவி நாகரத்னா, தன்னை விவாகரத்து செய்யாமல்

இரண்டாவது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனக்கு வீடு மற்றும் பணம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டு மனு ஒன்றினை பொலிஸ் நிலையத்தில் அளித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*