மகள் திருமண நேரத்தில் வெளியான அம்பானி குடும்பத்தாரின் இன்னொரு முகம்: வைரலாகும் புகைப்படங்கள்

இந்தியாவின் மிக பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி – நிட்டா அம்பானியின் magal இஷா அம்பானியின் திருமணம் வரும் 12-ஆம் திகதி மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இஷா அம்பானியை, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரேமோல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் பிரமோல், வருகிற 12ஆம் தேதி கரம்பிடிக்க இருக்கிறார். இவர்களது திருமணம், மும்பையில் உள்ள அம்பானி இல்லத்தில் நடைபெற இருக்கிறது.இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய சடங்குகள், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.

முகேஷ் அம்பானியின் மகள் திருமண சடங்குகளுக்காக அரண்மனை வடிவிலான பிரம்மாண்ட செட், தத்ரூபமாக நிர்மானிக்கப்பட்டிருக்கிறது. அம்பானி குடும்பத்தில் திருமண நிகழ்வு நடக்கவிருக்கும் நிலையில் பொது மக்களுக்கு அம்பானி குடும்பத்தார் தங்கள் கையால் உணவுகளை இலவசமாக அளித்து வருகிறார்கள். இந்நிலையில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தார் டிசம்பர் 7லிருந்து 10-ஆம் திகதி வரை ”அன்ன சேவா” என்ற அன்னதான திட்டத்தை நடத்தி வருகிறார்கள். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரில் தினம் மூன்று வேளை பொது மக்களுக்கு இலவசமாக உணவு அளிக்கிறார்கள்.

இதில் கலந்து கொண்டு சாப்பிடுபவர்களில் பெரும்பாலானோர் உடல் ஊனமுற்றவர்கள் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு தங்கள் கரங்களால் முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானி மற்றும் மகள், மகன்கள் உணவுகளை பரிமாறுகிறார்கள்.

5,100 பேர் வரை இந்த அன்ன சேவாவில் கலந்து கொள்கிறார்கள். என்ன தான் பெரிய கோடீஸ்வரர்களாக இருந்தாலும், தங்கள் கைகளால் அம்பானி குடும்பத்தார் மகிழ்ச்சியாக மற்றவர்களுக்கு உணவளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*