இறந்துபோன ஒரே ஆசை மகள்: பின்னணி பாடகி சித்ராவிற்கு நடந்த சோகம்

பிரபல பின்னணி பாடகி சித்ரா இறந்துபோன தனது ஆசை மகளின் நினைவாக கேரளாவின் பருமுலாவில் உள்ள புனித கிரிகோரியஸ் சர்வதேச கேன்சர் மையத்தில், கீமோ தெரபி சிகிச்சை பிரிவை இலவசமாகக் கட்டிக்கொடுத்துள்ளார் பாடகி சித்ரா, தமிழில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். மலையாளம், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் 25,000 பாடல்களுக்கும் மேல் பாடி சாதனை படைத்துள்ளார், இவரது ஒரே மகள் நந்தனா 2011 ஆம் ஆண்டு துபாயில் நீச்சல்குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

தனது ஆசை மகளின் நினைவாக கீமோ தெரபி சிகிச்சை பிரிவை இலவசமாகக் கட்டிக்கொடுத்துள்ளார். இதன் திறப்பு விழாவில் கலந்துகொண்டபோது, சித்ரா, மகள் பற்றி பேசும்போது கண்கலங்கினார். பேசமுடியாமல் விம்மினார், பின்னர் பாடல் ஒன்றை மட்டும் பாடினார்.இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*