பிரபல நடிகர் ட்ரைலரை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய், 11 மணிக்கு போன் செய்து கலாட்டா

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர்.   விஜய் என்றால் இன்று சமூகவலைதளத்தில் பெரும் கொண்டாட்டம் தான். ரசிகர்கள் அப்படி டிரெண்ட் செய்து அசத்துகிறார்கள். மெர்சல், சர்கார் என அடுத்தடுத்து சாதனை செய்தன.  இவர் நடிப்பில் தற்போது ஸ்போர்ட்ஸ் படம் உருவாகி வருவதாக கூறப்படுகின்றது. இப்படத்தை வெற்றிப்பட இயக்குனர் அட்லீ இயக்கி வருகின்றார், இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் இதற்கு முன்பு வந்த மெர்சலில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருப்பார். அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவே நெஞ்சம் மறப்பதில்லை ட்ரைலர் தானாம், ஆம், அப்படத்தின் ட்ரைலரை விஜய் ஒரு நாள் இரவு பார்த்தாராம்.

அதை 4 முறை பார்த்து உடனே எஸ்.ஜே.சூர்யாவிற்கு போன் செய்து விழுந்து விழுந்து சிரித்தாராம்,  அதன் காரணமாகவே தனக்கு மெர்சல் படத்தில் வாய்ப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*