நடிகை ரஞ்சிதாவுடன் தனித்தீவில் தலைமறைவான நித்யானந்தா? அடுத்தடுத்து வெளியாகும் தகவல்

நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் தனித் தீவில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியில் சாமியார் நித்யானந்தாவின் தியான பீடம் ஆசிரமம் உள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின் அவருடைய சிஷ்யை ஒருவர் அவர் மீது பாலியல் புகார் அளித்தார். இதனால் இது தொடர்பான வழக்கு ராம்நகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நித்யானந்தா கடந்த சில மாதங்களாகவே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை .

இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் நித்யானந்தாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் திகதியோடு நித்யானந்தாவின் பாஸ்போர்ட் காலாவதி ஆவதால், இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை அவர் பாஸ்போர்ட்டை புதுபிக்க கூடாது என்று பொலிசார் அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக நித்யானந்தா தலைமறைவாக இருந்தார். அவர் பாலியல் பலாத்கார வழக்கிற்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக செய்தி வெளியானது.

நித்யானந்தா கடந்த 6 மாதங்களாக எங்கிருக்கிறார் என்ற தகவல் மர்மமாகவே இருந்தது. இந்நிலையில் அவர் பிரபல நடிகை ரஞ்சிதாவுடன் தனித் தீவுக்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நித்யானந்தா வட இந்தியாவில் இருந்து உத்தரபிரதேச அரசியல்வாதிகளின் உதவியுடன் சாலை மார்க்கமாக நேபாளத்துக்கு சென்று அங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் பிரித்தானியா சென்றுவிட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.