வயிற்றிலிருந்து மாயமான குழந்தை..!! திகைத்து போன கணவன்… போலீசார் விசாரணையில் வெளியான மனைவியின் அந்தரங்கம்

சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி மனைவியை காணவில்லை என கணவர் புகார் கொடுத்த நிலையில், எஜமான் திரைப்படத்தைப் போல, கர்ப்பம் ஆகாமலே கணவர் குடும்பத்தினரை தான் கர்ப்பம் என்று கூறி பெண் ஏமாற்றியது தெரியவந்தது. சென்னை சூளை பகுதியை சேர்ந்த மெக்கானிக் சுதாகர்-தமது அக்காள் மகளை 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். தாம் கருவுற்றிருப்பதாகக் கூறி குடும்பத்தினரை ஏமாற்றிவந்த நிலையில்.

பிரசவ தேதி நெருங்குவதால் கணவரும் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு உடன் வந்தார்.  செய்வதறியாமல் அங்கிருந்து தப்பிய நிலையில், மனைவியைக் காணவில்லை என கணவர் போலீசில் புகாரளித்தார். பின் கணவரைத் தொடர்புகொண்டு யாரோ தம்மைக் கடத்தி, பிறந்த குழந்தையையும் எடுத்துச் சென்றுவிட்டதாக மனைவி கூறினார்.

சிசிடிவி காட்சியில் அவர் தனியாகவே கர்ப்பிணியைப் போலன்றி வேகவேகமாக நடந்து சென்றது பதிவானதால் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. குழந்தை இல்லாததால் கணவர் தம்மைப் பிரிந்து விடுவாரோ

என்ற அச்சத்தில் இவ்வாறு செய்ததாக அப்பெண் வருத்தத்துடன் வாக்குமூலம் அளித்ததால், அவருக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படவுள்ளது.இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*