படுக்கைக்கு செல்ல மறுத்ததால் 8 மாசமா வாய்ப்பு இல்ல… நடிகை அதிதி ராவ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அதிதி ராவ் ஹிடாரி, ‘காற்று வெளியிடை’ படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் இவர் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிதி, நான் சினிமா துறைக்கு வந்தபோது ரொம்ப அப்பாவியாக இருந்தேன், என்னை ரொம்பவே பொத்திப் பொத்தி வளர்த்துவிட்டார்கள். அந்த வதந்திகள் எல்லாமே உண்மை என்பது எனக்கு தெரியாது. அப்போது, பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது எல்லாம் நடந்து கொண்டிருந்தது.

எனக்கு அப்படி ஒன்றும் மோசமாக நடக்கவில்லை. ஆனாலும் ஒரு சம்பவம் நடந்தது. அதனால் நான் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இருந்தாலும் இது அல்லது அது என்று எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.  நான் அப்படி ஒன்றும் பட வாய்ப்பு தேவை இல்லை என்று வெளியேறிவிட்டேன். அந்த சம்பவத்திற்கு பிறகு 8 மாதங்களாக எனக்கு பட வாய்ப்பே இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்து பேச அவர்களுக்கு நேரம் அளிக்க வேண்டும். அவர்கள் தயாராக இருந்தால் மட்டுமே அது குறித்து பேச வேண்டும்.

அப்படி பேசவில்லை என்றால் ஓ, பணம் வாங்கியிருப்பார், இல்லை என்றால் மிரட்டி அமைதியாக இருக்குமாறு கூறியிருப்பார்கள் என்று மக்கள் பேசுவார்கள். தங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை தான் தான் செய்ய வேண்டும்.

மீ டூ இயக்கம் வேறு மாதிரியாக திசை திரும்புகிறது. நீ பேச வேண்டும். இல்லை என்றால் விட்டுக் கொடுத்துவிடுகிறாய் என்று அர்த்தம் என்பது போன்று சென்று கொண்டிருக்கிறது என்கிறார் அதிதி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*