கால்களை பிடித்து கணவர் கெஞ்சியும் எனக்கு விருப்பமில்லை..!! அதனால தான் அப்படி செய்தேன்..! இளம் மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்

தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனைக் கொலை செய்த மனைவி உட்பட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (26). இவர் கடந்த 23-ம் திகதி இரவு கரூரை அடுத்த மணல்மேடு பகுதியில் தலை கல்லால் நசுக்கப்பட்டு இறந்துகிடந்தார். சம்பவம் குறித்து விசாரித்த பொலிசாருக்கு மணிவண்ணனை யாரோ திட்டமிட்டு கல்லால் நசுக்கி கொலை செய்திருக்கிறார்கள்’ என்ற சந்தேகம் ஏற்பட்டது இந்நிலையில் மணிவண்ணனின் மனைவி காயத்ரிதேவி (21) கணவரின் சடலத்தை பார்த்து கதறி அழுதார். இதைப் பார்த்த அங்கிருந்த பலரும் காயத்ரிதேவியின் அழுகையைப் பார்த்து கண் கலங்கினர்.

காயத்ரிதேவியின் அழுகையைப் பார்த்த பொலிசாருக்கும் அவர்மீது சந்தேகம் வரவில்லை. ஆனால், பல கோணங்களில் விசாரித்த பொலிசார் கடைசியில் காயத்ரிதேவியின் பக்கம் திரும்பினர். என் கணவர் மேல நான் உசுரா இருந்தேன். அவர் இல்லாமப் போனதால், நானும் செத்துப் போயிருவேன்’ என்று கூறிவந்துள்ளார். ஆனால், அவர்மீது இருந்த சந்தேகத்தால், தங்கள் பாணி கிடுக்கிப்பிடி விசாரணையை பொலிசார் நடத்தியுள்ளனர். இதில் கணவரை கொன்றதை அவர் ஒப்பு கொண்டார். காயத்ரி அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் கமலக்கண்ணன் என்பவரை காதலித்து வந்தேன்.

எங்கள் வாழ்க்கைக்கு கணவர் இடைஞ்சலாக இருந்ததால் அவரைக் கொலை செய்ய முடிவெடுத்தோம். அதன்படி, கமலக்கண்ணனின் நண்பர்கள் உதவியுடன், கணவர் மணிவண்ணனைக் கொன்றது நான்தான். நைசா பேசி இங்க வரவழைச்சோம்.

என்னை விட்டுரு காயத்ரி. நீ விருப்பப்பட்டபடியே யாரோட வேண்ணாலும் வாழு’ன்னு அவர் கெஞ்சியும் விடவில்லை, கொன்றுவிட்டோம் என்று கூறியுள்ளார். இச்சம்பவத்தில் காயத்ரிதேவிக்கு துணையாக இருந்த கள்ளக்காதலனான கமலக்கண்ணன் மற்றும் அவரது நண்பர் ரூபன்குமார் உள்ளிட்ட மூவரையும் கைதுசெய்து, சிறையில் அடைத்திருக்கிறது காவல் துறை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*