நிகழும் விளம்பி வருடம் மார்கழி மாதம் தசமி திதியில் சமநோக்குக் கொண்ட சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, கன்னி லக்னம், அமிர்தயோக நன்னாளில் நள்ளிரவு 12 மணிக்கு 2019ஆம் ஆண்டு பிறக்கிறது சுவாதி நட்சத்திரத்தின் ராசி துலாம். இதன் ராசிநாதன் சுக்கிரன் என்பதால், குடும்பத்திலும் சமூகச் சூழலிலும் சுபிட்சம் நிலவும். பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேரும் என்று ஜோதிடம் கூறுகின்றது. நவநாகரிக வாழ்க்கையின் உந்துதலால் தனிக்குடித்தனம் போன பலரும் கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் அருமையைத் தேடி வருவார்கள்.
உலகமெங்கும் கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு மரியாதை கிடைக்கும். கல்வியில் நிறைய மாற்றங்கள் வரத்தொடங்கும். துலாம் ராசியில் ஆண்டு பிறப்பதால், சுயமாகத் தொழில் செய்யலாம் என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.சொந்த வீடு அமையாத பலருக்கும், இந்த ஆண்டு சொந்த வீடு அமையும். வாகனங்களின் பெருக்கம் அபரிமிதமாக இருக்குமாம்.
நீண்ட நாள்களாகத் திருமணம் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு.இந்த ஆண்டு திருமணம் நல்லவிதமாக நடைபெறும். வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.