2019ல் இந்த ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நன்மையை மட்டும்தான் செய்யப்போகிறாராம்.. உங்க ராசியும் இருக்காணு பாருங்க..!

நமது ஜாதகத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் நம் வாழ்வில் வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும். அதில் மிக முக்கியமான ஒன்று நமது ராசிக்கு வரும் சனிபகவானின் வரவாகும். சனிபகவான் உங்கள் ஜாதகத்தில் சாதகமான இடத்திற்கு வந்தால் மகிழ்ச்சி, மனநிறைவு, செல்வம் போன்ற அனைத்து நன்மைகளும் கிடைக்கும். அதுவே பாதகமான இடத்திற்கு சனிபகவான் வந்தால் துரதிர்ஷ்டம், துன்பங்கள், குடும்ப பிரச்சினை சிலசமயம் மரணம் ஏற்படும் அபாயங்கள் கூட ஏற்படலாம். 2019 ஆம் ஆண்டு சனிபகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பார் என்று கூறப்படுகிறது. சனிபகவான் தனுசு ராசியில் இருந்தாலும் மற்ற ராசிகளிலும் அவர் ஏற்படுத்தும் பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும்.

ஆனால் அவர் ஏற்படுத்தும் பாதிப்புகள் உங்களுக்கு நல்லதாக இருக்குமா அல்லது கெட்டதாக இருக்குமா என்பது உங்கள் ஜாதகத்தை பொறுத்து மாறுபடும். அதன்படி 2019ல் சனிபகவானால் உங்களுக்கு ஏற்படபோகும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
சனிபகவானின் நிலைப்பாடு இந்த ஆண்டில் உங்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. இது உங்கள் வருமானத்தை பாதிப்பதுடன் செலவையும் இருமடங்கு அதிகரிக்கும். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியுடன் நீங்கள் அனைத்து செயல்களையும் செய்யவேண்டும். உங்கள் நடத்தையில் கட்டுப்பாடு அவசியம், அதேசமயம் உங்கள் எண்ணங்கள் எப்பொழுதும் நேர்மறையாக இருக்க வேண்டும்.

ரிஷபம்
2019 ஆம் ஆண்டில் சனிபகவானின் நிலைப்பாடு ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில்ரீதியாகவும், நிதிநிலையிலும் பல சவால்களை உண்டாக்கும். குழந்தைகளின் கல்வி விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம் அதே சமயம் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. சண்டை, சச்சரவுகளில் இருந்து விலகி இருக்கவும். வேலைகளில் சமநிலையை பராமரிக்கவும், ஜூன் முதல் அக்டோபர் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் நிலைப்பாடு இந்த ஆண்டு நன்மைகளை விளைவிக்க கூடியதாக இருக்கும். உங்கள் அம்மாவின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிய முதலீடுகளும் இலாபகரமானதாக இருக்கும். அலுவலக பணியை சமநிலையில் வைத்திருப்பது மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை அதிகரிக்கும். நீண்ட கால நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் சனிபகவானின் நிலைப்பாட்டால் மிகவும் அடக்கி வாசிக்க வேண்டிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய காலம் இது. அடிக்கடி பயணம் செய்ய நேரிடலாம். விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்த்து உங்களுக்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவழிப்பது உங்களுக்கு அமைதியை தரும். ஆன்மீகத்தில் அதிக நாட்டத்துடன் இருப்பது உங்கள் பிரச்சினைகளை ஓரளவிற்கு குறைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியில் உள்ள மாணவர்களுக்கு இந்த ஆண்டு சனிபகவானால் சிறப்பான ஆண்டாக இருக்கும். தேர்வுகளில் அவர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவுகள் வரும். புது தொழில் தொடங்க இது சிறந்த ஆண்டாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பதவி உயர்வு, புதிய வேலை போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சினைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. உங்கள் மணவாழ்க்கையும், நிதி நிலையும் இந்த ஆண்டு சீராக இருக்கும். செலவுகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கன்னி
கன்னி ராசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு சிறிது சிரமமான ஆண்டாகத்தான் இருக்கும் ஏனெனில் கவனம் தொடர்பான பிரச்சினைகள் அவர்களுக்கு எழ வாய்ப்புள்ளது. முதலீடுகளுக்கு இந்த ஆண்டு ஏற்றதல்ல. வேலைப்பளு தொடர்ச்சியாக இருக்கும். உடற்பயிற்சியும், தியானமும் கட்டாயம் செய்யவேண்டியவை ஆகும். கடினமாக உழைப்பவர்களுக்கு ஓரளவிற்கு நல்ல பயன்கள் ஏற்படலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவானால் இந்த ஆண்டு புதிய வாகனம், மகிழ்ச்சி, பெற்றோர்களின் ஆரோக்கியம் போன்ற நன்மைகள் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர் படிப்பு படிக்க வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த இது சிறந்த ஆண்டாக இருக்கும். உங்களுக்கு கிடைக்கும் புதிய நம்பிக்கைகள் புதிய முதலீட்டையும், ஏற்கனவே இருக்கும் முதலீட்டையும் இலாபகரமானதாக மாற்றும். நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வாய்புள்ளது. அதேசமயம் செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
இந்த ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும். உங்கள் நிதி நிலைமை இந்த ஆண்டு சீராக இருக்கும். மிகப்பெரிய வேலை உங்களை குடும்பத்தில் இருந்து சிறிது தூரம் பிரித்து வைத்திருக்கும். நீண்ட தூர பயணம் செய்ய நேரிடும். வியாபாரத்தில் இலாபத்தை எதிர்பார்க்கலாம். ஆனால் கடினமாக உழைக்க வேண்டிய ஆண்டு இது.

தனுசு
இந்த ஆண்டு உங்களுக்கு செல்வம், குடும்ப மகிழ்ச்சி, உடன்பிறந்தவர்களுடன் நல்லுறவு என பல நன்மைகள் ஏற்படும். மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். மனஅழுத்தம் அதிகரிக்கும் எனவே இடைவெளி எடுத்துக்கொண்டு வெளியிடங்களுக்கு செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் அவர்கள் துறையில் பெரிய முன்னேற்றத்தை அடைவார்கள். மனைவியின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மகரம்
வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு அவர்கள் விரும்பியது நடக்கும். தவறான செயல்களில் ஈடுப்படுபவர்களுக்கு அதற்குரிய தண்டனை கிடைக்கும். கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் புதிய உச்சத்தை தொடுவீர்கள். வரவுக்கு ஏற்றார் போல செலவு செய்ய வேண்டியது அவசியம். உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமான காலமாகும். சனிபகவானால் இந்த ஆண்டு உங்கள் ஆரோக்கியம் மேம்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் கவனமாக படிக்க வேண்டியது அவசியம்.

மீனம்
உங்களின் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும் ஆண்டாக 2019 இருக்கப்போகிறது. உங்கள் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டிய காலம் இது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க அதிக உழைப்பும், நம்பிக்கையும் தேவைப்படும். வரவு அதிகரிக்கும் ஆனால் செலவும் அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.