2019ல் கண்டிப்பாக இந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் நடக்கும்.. யார் அந்த அதிர்ஷட ராசிக்காரர்கள் ?

2019- ஆம் ஆண்டில் அவர்களது திருமண மணியின் ஓசையைக் கேட்பதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் மூன்று இராசிகளுக்கு தென்படுகின்றன. கீழுள்ள மூன்று அதிர்ஷ்டமான இராசிகள் 2019-ம் ஆண்டில் தங்கள் காதல் வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய படியைக் கடப்பார்கள். அதில் மிக முக்கியமான ராசிக்காரர்களாக இந்த அதிர்ஷ்டத்துக்கு உரிய விருச்சிகம், தனுசு, மீனம். விருச்சிகம்-விருச்சக ராசிக்காரர்களுக்கு தங்களின் காதலுக்கு ‘ஆமாம்’ சொல்வதற்கான சரியான நேரம் இது. இந்த ஆண்டு உங்கள் உறவை நீங்கள் உறுதிப்படுத்துவீர்கள். உங்கள் விருப்பப்படி யாரையாவது நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையின் வேறு கட்டத்திற்குள் நுழைய உங்கள் கதவுகளை முழு சக்தியுடன் காதல் உடைத்துவிட்டது போலத் தோன்றுகிறது. நீங்கள் யாரையேனும் காதலிக்கிறீர்கள் அல்லது உங்களை காதலிப்பவர்களுக்கும் நீங்கள் ஓகே சொல்லும் மிக சரியான தருணம் இதுதான். உங்களுடைய வீட்டிலும் உங்களுடைய காதலுக்கு போராட்டமே இல்லாமல் பச்சை காட்டுவார்கள். அதனால் தைரியமாகக் களத்தில் இறங்குங்கள்.

தனுசு
தனுசு வாசிகளுக்கு 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதற்கு மிக சாதகமான ஆண்டாக இருக்கும். இவர்களின் நீண்ட கால திருமணத் தடை உடைந்து இந்த ஆண்டு திருமணம் கை கூடி வரும். உங்கள் தொழில் மற்றும் சமூக வட்டாரங்களில் உள்ளவர்களுக்கு உங்கள் திருமணம் மட்டுமே மிகவும் பிடித்த தலைப்பாக இருக்கும். திருமண வரன்களில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகளுக்காக நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் புாகாத கோவில் இல்லை. வேண்டாத தெய்வங்கள். நீங்கள் இதுவரையிலும் செய்த பரிகாரங்களுக்கான மொத்த பலன்களையும் இந்த வருடத்தில் நீங்கள் மிகச் சிறப்பாக அனுபவிப்பீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களும் 2019- ல் அதிர்ஷ்டசாலி இராசிகளில் ஒருவராக உள்ளார்கள், அவர்களும் மகிழ்ச்சியான மணவாழ்விற்கு வழிவகுப்பதன் மூலம் தங்கள் வாழ்க்கையை இந்த ஆண்டு நித்திய மகிழ்ச்சியை நோக்கி நகர்த்துவார்கள். அவர்கள் வழியில் உள்ள எல்லா தடங்கல்களையும் நீக்கிய பிறகு தங்கள் மிகவும் நேசித்தவரை மணந்து கொள்ள முடியும். மீன ராசிக்காரர்கள் எதையுமே மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் நிதானத்துடன் அணுகக் கூடியவர்களாக இருப்பார்கள். அதனால் திருமணங்கள் கைகூடி வருவதிலும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்திருக்கும். அந்த கெட்ட சக்திகள் விலகி, உங்கள் வாழ்க்கையில் தாம்பத்திய வாழ்க்கையில் நிலைபெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டிய நேரம் உங்களுக்கு கூடி வந்திருக்கிறது.