சக்தியின் உண்மையான சுயரூபம்… வெளியே லீக்கான கௌசல்யா, திருநங்கையின் ஆடியோ!

ஆணவக்கொலையால் தனது கணவர் உடுமலைப் பேட்டை சங்கர் உயிரை இழந்த கௌசல்யா, சங்கர் பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார். சங்கர் இறந்து இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் கௌசல்யா நிமிர் கலையகத்தின் தலைமை ஆசான் சக்தி என்ற நபரை மறுமணம் செய்ய முடிவெடுத்தார். பெரியார் சிலை முன் திராவிட இயக்க தோழர்கள் முன்னிலையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. ஆனால் திருமணம் முடிந்த ஒரு சில நாட்களிலேயே கௌசல்யாவை திருமணம் செய்திருக்கும் சக்தி சிலப் பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகவும்,

ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டு அவர் கர்ப்பமானதும் அந்த கருவை வற்புறுத்தி கலைக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த விவரங்கள் யாவு கௌசல்யாவுக்கும் தெரியும் என்றும் தெரிந்தும் சக்தியை திருமணம் செய்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் முற்போக்கு திருமணமாகக் கொண்டாடப்பட்ட கௌசல்யா – சக்தி கல்யாணம் சர்ச்சைகளுக்கு உள்ளானது. இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகளை விசாரித்து தீர்வு காண்பதற்கு தமுழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தியாகு,

திராவிடர் -விடுதலைக் கழகத் தலைவர், கொளத்துர் தா.செ. மணி ஆகிய இருவரிடமும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. விசாரணைக்குப் பின்பு சக்தி, கௌசல்யா இருவரும் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் சக்தி நிமிர்வு கலையகத்திலிருந்து வெளியே வெண்டும் என்றும்,

ஆறு மாதகாலம் சக்தி எந்தப் பொதுநிகழ்ச்சியிலும் பறையிசைக்கக் கூடாது என்றும் அபராதமாக சக்தி ஆறு மாத காலத்துக்குள் மூன்று இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வெளியாகியது. தற்போது திருநங்கை ஒருவரிடம் கௌசல்யா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. இதில் சக்தியை பற்றி தெரிந்தே கௌசல்யா திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*