சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்த பிரபல நடிகை! அடையாளம் தெரியாமல் மாறிய நடிகையின் தோற்றம்

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் சசிகலா. சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றவர் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கின்றார். அண்மையில் இவரை காண பிரபல நடிகை விஜயசாந்தி சென்றுள்ளார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்ததாக சொல்லப்படுகிறது. ரஜினி, கமல் ஆகியோருடன் நடித்தவர் விஜயசாந்தி. 1998 முதல் அரசியல் களத்தில் இறங்கிவிட்டார். இந்நிலையில் சசிகலாவிடம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க கூறியதாக சொல்லப்படுகிறது.

மேலும் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற போது நேரில் சென்று சசிகலாவை விஜயசாந்தி வாழ்த்தியதோடு தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட போது அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*