திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து சீமானுக்கு அடித்த அதிர்ஷ்டம்..!! மகிழ்ச்சியில் குடும்பத்தார்

சீமான்-கயல்விழி கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கில்நடைபெற்றது. தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது.தமிழின் முதல் எழுத்தான ‘அ’ பொறிக்கப்பட்ட டொலருடன் கூடிய தாலியை பழ.நெடுமாறன் எடுத்து தர, அதை வாங்கி சீமான் கயல்விழி கழுத்தில் கட்டினார். திருமணமாகி 5 அண்டுகள் ஆன நிலையில் சீமான்-கயல்விழி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கயல்விழிக்கு பிரசவம் நடந்தது.தாயும் சேயும் நலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமான் தந்தை ஆகியுள்ளதால், நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் சந்தோஷத்தில் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.