சன் டிவிக்கு இந்த அசிங்கம் தேவையா? ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி

நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்தை தயாரித்திருந்த சன் பிக்சர்ஸ் தான் தற்போது ரஜினி நடித்த பேட்ட படத்தையும் தயாரித்துள்ளது. இந்நிலையில் பேட்ட படத்தின் தமிழ்நாட்டு வசூல் அஜித்தின் விஸ்வாசத்தை விட குறைவு என பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்கள் கடந்த சில நாட்களாக கூறி வருகின்றனர். ஆதனால் பாக்ஸ்ஆபிஸ் ட்ராக்கர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. “இன்னும் எங்களுக்கு கூட முழு வசூல் விவரம் வரவில்லை” என குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் சர்கார் படம் இரண்டு நாளில் 100 கோடி வசூல் என அதே பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்கள் பதிவிட்ட போது அதை ஏற்றுக்கொண்டு சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் ரீட்வீட் செய்தது. சர்கார் வசூல் விவரத்தை ஏற்றுக்கொண்ட சன் பிக்சர்ஸ் பேட்ட வசூல் பற்றி வரும் செய்திகளை எதிர்ப்பது ஏன் என பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*