ப்ளூ சட்டை மாறனுக்கு ஆப்பு வைத்த சன் டிவி..!! என்ன செய்தார்கள் தெரியுமா?

ஒரு படம் எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமா..? அப்போ ப்ளூ சட்டை மாறனின் ரிவியூ பாருங்கள் என்று சொல்லும் அளவிற்கு, யூட்யூப் சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர் ‘தமிழ் டால்கிஸ் மாறன்’. பெரும்பாலும் இவரிடம் இருந்து நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே கிடைக்கும் என்பதனால், தயாரிப்பு நிறுவனங்களின் தற்போதைய மிகப்பெரும் எதிரி இவர்தான். படம் மட்டும் ஓரளவு சுமாராக இருந்து விட்டால் போதும், சகட்டு மேனிக்கு விமர்சித்து தள்ளிவிடும் இவரது பேச்சுக்கு, லட்சக்கணக்கான ரசிகர்களும் தமிழகத்தில் உண்டு. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் என கொண்டாடப்படும் பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்களும் இவரிடம் இருந்து நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

இதனையடுத்து, ரசிகர்களே கொந்தளித்து இவரது விமர்சனங்களுக்கு எதிராக இரு படங்களுக்கும் சப்போர்ட் செய்து வந்தனர்.  இந்நிலையில் ரஜினியின் ‘பேட்ட’ திரைப்பட விமர்சனம் மட்டும் திடீரென இவரது சேனலில் இருந்து காணாமல் போனது. இதன் பின்னணியில் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் இருக்கலாம் என்றும் வதந்திகள் பரவ துவங்கியது. அந்த வதந்திகளை உண்மையாக்குவது போல, ஆன்லைன் டிராக்கர்சை தனது சமூக வலைத்தளத்தில் தாளித்து எடுத்திருந்தது அந்நிறுவனம்.

இதனால் அந்நிறுவனம் கொடுத்த அழுத்தத்தின் பெயரிலேயே, பேட்ட விமர்சனம் நீக்கப்பட்டதாக, பலரும் பேச துவங்கினர். இந்த விவாதங்கள் ஒரு புறம் இருக்க, ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ எனும் பன்ச் வசனதிற்கு ஏற்ப மீண்டும் உலாவ துவங்கியுள்ளது ‘ப்ளூ சட்டை மாறனின் பேட்ட’ விமர்சனம்.

இப்படி பரபரப்பை கிளப்பும் அளவிற்கு பேச வைத்த இந்த நிகழ்வு, பார்வையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாக இருக்கலாம் எனவும் விமர்சிக்க துவங்கியுள்ளனர் ரசிகர்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*