பிரியா பவானியின் காதலன் இவரா..? அம்பலப்படுத்திய நடிகர் சூர்யா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகை பிரியா பவானி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியலின் மூலம் கிடைத்த வாய்ப்பால் மேயாதமான் படத்தின் மூலம் ஹீரோயினாக மாறியவர். அதில் ஹீரோயினாக சங்கர் நடித்திருந்தார். இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் பிரபலமான ஒரு சீரியல் ஆகும். வைபவ் நடித்த மேயாதமான் படத்திற்கு பின்னர், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார் ப்ரியா. இறுதியாக கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிரியா பவானி ஷங்கரை பல காலமாக துரத்தும் ஒரு விடயம் என்னவெனில் அவருக்கு காதலர் இருக்கிறாரா இல்லையா என்பது தான். இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான ஜே சூர்யா பிரியா பவானி ஷங்கருக்கு காதலர் இருக்கிறார் என்று உறுதிப்படுத்தியுள்ளார். பிரியா பவானி சங்கர் தற்போது எஸ் ஜே சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் எஸ் ஜே சூர்யாவும், பிரியா பவானி சங்கர் ஜே ஸ்ருதி ஹாசன்

தொகுத்து வழங்கும் ‘ஹலோ சகோ’ என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். அப்போது ஸ்ருதி ஹாசன் எஸ் ஜே சூரியவிடம், பிரியா பவானி சங்கருக்கும் யாரை அதிகம் பிடிக்கும் என்று கேட்டார்.

அதற்கு எஸ் ஜே சூர்யா, அவரோட பாய் பிரின்ட் தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும். படப்பிடிப்பில் அவரது அப்பாவுடன் கூட அவர் அவ்வளவு நேரம் பேச மாட்டார் என்று கூறினார். இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.