வீட்டிற்கு அழைத்து அவளை அனுபவிக்க நினைத்தேன்! 19 வயது இளைஞனின் திடுக்கிடும் வாக்குமூலம்

இந்தியாவில் மொடல் அழகி கொலை செய்யப்பட்ட வழக்கில் பொலிசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் கோடாவை சேர்ந்தவர் மான்சி தீக்‌ஷித்(20). மொடல் ஆகும் ஆசையில் இருந்த இவருக்கு மும்பையில் படித்துக் கொண்டிருந்த சையத் முஸாமில் (19) என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். ஹைதராபாத்தில் இருந்த மும்பை வந்த சையத், மான்சி தீக்‌ஷித்திடம் பேசி பழகியுள்ளார். அப்போது மான்சி தீக்‌ஷித்திடம் தான் ஒரு பிரபல புகைப்படக் கலைஞர் என்றும் தன்னிடம் புகைப்படம் எடுத்த பலர் இப்போது மொடலிங்கில் ஜொலிப்பதாகவும் கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பிய நிலையில், மும்பை அந்தேரியில் உள்ள தனது வீட்டுக்கு மான்சியை அழைத்துள்ளார்.

அங்கு இருவரும் புகைப்படம் எடுப்பதைப் பற்றி பேசியுள்ளனர். பின்னர் புகைப்படம் எடுப்பதற்காக மான்சி உடை மாற்ற அறைக்குள் சென்ற போது, சையத் தன்னுடைய ரகசிய கமெரா மூலம் அதை படம் பிடித்துள்ளார். பின்னர் போட்டோ ஷூட் போல ஏமாற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் மான்சிக்கு இது பொய் வேலை என்பது தெரியவந்தது. அப்போது சையத் தான் புகைப்படக் கலைஞர் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் கோபமான மான்சி, தன்னை ஏமாற்றிவிட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உன்னை பொலிசில் புகார் செய்வேன் என்று கூற, அதற்கு சையத், நீ உடை மாற்றும் புகைப்படங்கள் என்னிடம் இருக்கிறது. இதை ஆன்லைனில் பரப்பிவிடுவேன். என்னுடன் உல்லாசமாக இரு என்று மிரட்டியுள்ளான்.

இதற்கு மறுத்த அவர், சையத்திடம் சண்டை போட்டு வெளியேற முயன்ற போது மான்சியை பிடித்து இழுத்து கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்து, பின்னர் சூட்கேஸுக்குள் அவர் உடலை அடக்கி, கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து, மலாடு அருகே வீசிச்சென்றுள்ளார். கார் ஓட்டி வந்த வாடகை டிரைவர் அடுத்த சில நிமிடங்களிலே அதே இடத்துக்குத் திரும்பி வந்து பார்த்தார். சையத் கொண்டு வந்த சூட் கேஸ் ஓரத்தில் கிடப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தார். உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர்கள் விரைந்து வந்து திறந்து பார்த்தனர். உள்ளே இளம் பெண்ணின் உடல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அங்குள்ள சிசிடிவி கேமராவை பரிசோதித்தனர். அப்போது சையத், சூட்கேஸை போட்டுவிட்டு ஆட்டோவில் தப்பிச் செல்லும் காட்சிப்பதிவுகள் கிடைத்தன. விரைந்து செயல் பட்ட பொலிசார், அந்த ஆட்டோவை விரட்டிச் சென்று சையத்தை அமுக்கினர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒவ்வொரு முறையில் ஒவ்வொரு தகவலை சொல்வதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக பொலிசார் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் சையத்தின் வாக்குமூலமும் இடம் பெற்றிருந்தது. அதில், நான் மான்சியை அனுபவிக்கும் நோக்குடன் வீட்டுக்கு வரவழைத்தேன். வந்ததுமே என் நோக்கம் அவருக்கு புரிந்துவிட் டதால், தகராறில் ஈடுபட்டார். மர ஸ்டூலால் தாக்கினேன். மயங்கி விழுந்தார். பின்னர் அவருடன் தகாத உறவில் ஈடுபட முயன்றேன். அவர் சுதாரித்து தடுத்தார். பின்னர் கயிறால் கழுத்தை இறுக்கிக் கொன்று, உடலை சூட்கேஸுக்குள் அடைத்து வாடகை கார் புக் செய்தேன்.

முதலில் வந்த வாடகை கார் டிரைவர், சூட்கேஸ் ஏன், இவ்வளவு கனமாக இருக்கிறது என்று கேட்டார். இதனால் அவர் காரை வேண்டாம் என்று கூறினேன். பின்னர் மற்றொரு காரை வரவழைத்து, மலாடு அருகே வீசிவிட்டு, ஒரு ஆட்டோவில் திரும்பினேன். பிறகு போலீசார் என்னை கைது செய்துவிட்டனர் என்று கூறினார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*