15 ஆண்களை திருமணம் செய்த பலே அழகி: 16-வது கணவனால் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி தகவல்!

திருச்சியில் தன்னுடைய மனைவி 15 ஆண்களை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், பணம், நகைகளை திருடிக்கொண்டு தப்பிவிட்டதாகவும் ஒருவர் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திருவாருர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த உதயகுமார் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். சிங்கப்பூரில் வேலை செய்து வரும் இவர், ஆன்லைன் மூலம் திருச்சி கருமண்டபம் நேரு நகரை சேர்ந்த மகாலட்சுமி என்பவரை சந்தித்து, 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த சில நாட்களிலே உதயகுமார் மீண்டும் வெளிநாட்டிற்கு கிளம்பிவிட்டார். சில மாதங்கள் கழித்து போன் செய்த மகாலட்சுமி தான் கர்பமடைந்திருப்பதாக கூறியுள்ளார்.

இதனை கேட்டு பெரும் மகிழ்ச்சியடைந்த உதயகுமார், உற்சாக மிகுதியில் மன்னார்குடி திரும்பியுள்ளார். அங்கு வீடு பூட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்த போது, வீட்டை காலி செய்துவிட்டு மகாலட்சுமி சென்றுவிட்டதாக கூறியுள்ளனர். உடனே மனைவியை தொடர்புகொள்ள முயற்சித்தபோது செல்போன் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்துள்ளது. பல்வேறு இடங்களில் தேடிய அவர் இறுதியாக மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

அதன்பிறகு எதேச்சையாக மனைவியின் மின்னஞ்சல் முகவரியை ஆய்வு செய்துள்ளார். அதனை திறந்து பார்க்கும்போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. மகாலட்சுமி பல ஆண்களை திருமணம் செய்துகொண்டு அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அதில் பதிந்திருந்துள்ளன. மேலும், பலருடன் ஆபாசமாக சாட் செய்திருக்கும் பதிவுகளும் கிடைத்துள்ளன.

இதில் முதல் கணவரால் கர்பமடைந்திருந்த போது அவர் எட்டி உதைத்ததில், மகாலட்சுமியின் கர்ப்பம் கலைந்திருப்பதும் அதில் இடம்பெற்றிருந்தது. இவற்றையெல்லாம் பார்த்து உதயகுமார் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். அப்போது திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திலிருந்து போன் செய்த பொலிஸார், மனைவியை எட்டி உதைத்ததில் கரு கலைந்துவிட்டதாக மகாலட்சுமி என்பவர் புகார் கொடுத்துள்ளார். விசாரணைக்காக காவல் நிலையம் வருமாறு கூறியுள்ளனர்.

இதற்கிடையில் உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மகாலட்சுமி கருக்கலைப்பு செய்ததற்கான ஆதாரங்களை திரட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு உதயகுமார் விரைந்துள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உதயகுமார், என்னை ஏமாற்றி 25 பவுன் நகை, 5 லட்சம் பணத்தை சுருட்டி கொண்டு மகாலட்சுமி ஓடி விட்டார். தற்போது ஆந்திரா பக்கம் உள்ளதாக அறிந்தேன். தனக்கு தந்தை இல்லை என்று முதலில் கூறி பரிதாபத்தை சம்பாதித்து அதன் வாயிலாக அவர், சுமார் 15க்கும் மேற்பட்ட ஆண்களை அவர் திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார் எனக்கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*