விஜய்சேதுபதியுடன் நடிக்கும் குட்டி சொர்ணாக்கா…! திடீரென்று லட்சக்கணக்கில் குவியும் வாழ்த்து? வயதை கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

தங்களை எப்படியாவது பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் லட்சக்கணக்கில் செலவு செய்து அலப்பறைகள் கூட்டுவதைப் பார்த்திருப்போம். ஊரில் நாலு பேர் தன்னைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காக அவர்கள் கொடுக்கும் அலம்பல், சலம்பல்களுக்கு அளவே இருக்காது. ஆனால் சிலரோ திடீரென வெளி உலகத்தில் பயங்கர வைரல் ஆகிவிடுவார்கள். அப்படி ஆவோமென்று அவர்களும் நினைத்திருக்க மாட்டார்கள். பைசா செலவில்லாமல் தன்னிடம் இருக்கும் ஏதோ ஒரு ஈர்ப்பால் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டுவிடுவார்கள். அப்படி திடீரென பேமஸாகி நம் எல்லோர் மனதையும் கட்டிப் போட்டவர்தான் நம்ம குட்டி சொர்ணாக்கா. இந்த குட்டி சொர்ணாக்காவின் உண்மையான பெயர் ஜெயலலிதா.

நம்ம சொர்ணாக்காவை பலரும் சிறுமி என்று நினைத்துக் கொண்டு தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவருக்கு வயது 22 ஆகிறதாம். உடல் வளர்ச்சி குன்றியதால் சிறுமி போன்ற தோற்றத்தில் இருக்கிறார். இவருடைய பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி. எதார்த்தமாக விடியோ எடுத்து வெளியிட அது வைரலாகி இப்போது டிரெண்டிங் பர்சனாலிட்டியாக மாறிவிட்டார். வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடித்துவிட்டார். தான் வெளி உலகத்துக்கு பயங்கரமாகி விட்டோம் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட சொர்ணாக்கா தன்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பி யாரேனும் வந்து கேட்டால் 50 ரூபாய் வாங்குகின்றாராம்.

அதே ஊரைச் சேர்ந்த ஒரு வளர்ந்து வரும் புதிய இயக்குநர் சொர்ணாக்காவிடம் என்னோட படத்துக்கு கால்சீட் தர்ற முடியுமா என்று கேட்டுள்ளார். அந்த பெண்ணும் தருகிறேன் என்று கூறியுள்ளார். சொர்ணாக்காவை சீக்கிரமாவே பெரிய திரையிலும் பார்த்து ரசிக்கலாம். இதேவேளை, அந்த ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் தங்களுடைய சொர்ணாக்காவுக்கு புது டிரஸ் வாங்கிக் கொடுத்து டிக்டாக் வீடியோ எடுக்கிறார்கள். சொர்ணாக்காவும் வடிவேலுவின் டயலாக்கைப் பேசி டிக்டாக் விடீயோ செய்கிறார். குடிகாரர்களைத் திருத்தவே முடியாது.

குடிப்பதை நிறுத்துவதை விட்டு அரசை கடையை மூடு என்று சொல்வது, நீ குடித்துவிட்டு மல்லாக்க விழுந்தா நாங்களா பலி, அடிக்க வேண்டியது தான் அதுவும் ஒரு அளவு தான் என்று ரொம்ப பொறுப்பான பெண்ணாக பேசுகிறார். நடிகர் விஜய் சேதுபதியுடன் படம் நடிப்பதாகவும் அந்த படத்தின் பெயர் கடைசி விவசாயி என்றும் அதில் தான் நடித்த அனுபவங்கள் பற்றியும் தன் ஊரில் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். அதில் தன்னுடைய கேரக்டரின் பெயர் வசந்தா என்று ககலப்பாக பகிர்ந்து கொண்டார். அடுத்து பெரிய திரையில் ஒரு வலம் வந்து நம்மையெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தப் போகிறார் சொர்ணாக்கா.