69 பெண்களை மயக்கி உல்லாச வீடியோ…! தருமபுரி பண்ணையாருக்கு நீதிமன்றம் வழங்கிய தரமான தண்டனை என்ன தெரியுமா…?

தருமபுரியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தவனின் 4 ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சேர்ந்தவன் சிவராஜ். இந்த நபர் பலக்கோடு பகுதியில் உள்ள 69 பெண்களை மிரட்டிப் பணிய வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதை வீடியோ எடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2014ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிவராஜை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தருமபுரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில்.

கடந்த 2017-ஆம் ஆண்டு சிவராஜுக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, அவற்றை ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து, சிவராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான். தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், தனக்கு ஜாமீன் கோரியும் தனியாக ஒரு மனுவையும் தாக்கல் செய்தான்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞர் ஆர்.பிரதாப் குமார், சிவராஜூக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கூடாது.

என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களுக்குப் பின் தண்டனையைல் நிறுத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*