மாணவர்களை டியூசன் வரவழைத்து தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த உமேஷ்குமார், அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நித்யா(30). இவரும் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. நித்யா கடந்த 2016ம் ஆண்டு அரசுப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்த போது, மாணவர்களிடம் அதிக நெருக்கம் காட்டியுள்ளார். மேலும் ஒரு மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து வேறு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்ட நித்யா அங்கும் மாணவர்களுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளார். இரண்டு மாணவர்களை வெளியூருக்கு அழைத்து சென்று, அவர்களுடன் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து ரசித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மனைவியின் செல்போனில் இருந்த வீடியோக்களை பார்த்து உமேஷ்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த காரணத்தால் கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதற்கிடையில் மனைவிக்கு எதிராக ஆதாரங்களை திரட்டிய உமேஷ்குமார், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியிடம் புகார் கொடுத்தார்.

பின்னர் ஆட்சியர் கொடுத்த உத்தரவின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து நித்யாவை இன்று கைது செய்தனர். குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த சில அதிகாரிகள் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு.

நித்யாவின் மீது இருந்த குற்றச்சாட்டினை உறுதி செய்தனர். பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியை நித்யாவை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.