தமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை

2001 ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கி சாந்தகுமார் கொலைவழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. சரவணபவன் ஹொட்டலில் வேலை பார்த்து வந்த பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரது மனைவி ஜீவஜோதியுடன் ராஜகோபாலுக்கு ஏற்பட்ட தவறான தொடர்பு காரணமாக 2001 ஆம் ஆண்டு கொடைக்கானல் மலையில் சாந்தகுமார் புதைக்கப்பட்டது விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலையை சரவணபவன் உரிமையாளர்.

ராஜகோபால் உட்பட 8 பேர் சேர்ந்து செய்தததாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையில் ராஜகோபால் உள்பட 6 பேருக்கு கடந்த 2009-ல் சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனைத்தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த ராஜகோபால்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் சாட்சியங்கள் அனைத்தும் வலுவாக இருந்த காரணத்தால்

ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வருகிற ஜூலை 7ம் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*