தற்கொலை செய்து கொண்ட கணவன்… 8 வருடம் கழித்து இளம் விதவைக்கு அடித்த அதிர்ஷ்டம்!

இந்தியாவில் இளம் விதவை பெண்ணுக்கு அதிர்ஷ்டவசமாக மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்த நிலையில் பிரசாரம் செய்வதற்காக சமூகவலைதளம் மூலம் நிதியை வசூல் செய்துள்ளார்.  மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவை சேர்ந்தவர் சுதாகர். இவர் மனைவி வைஷாலி (28). தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். விவசாயியான சுதாகர் கடந்த 2011ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ரூ.70000 கடன் வாங்கிய நிலையில் அதை திருப்பி செலுத்த முடியாமல் உயிரை மாய்த்து கொண்டார் சுதாகர். பின்னர் அங்கன்வாடியில் மாதம் ரூ.3500-க்கு வேலை செய்து வந்த வைஷாலிக்கு விதவை பென்ஷனாக ரூ 600 வந்தது.

இந்த சொற்ப வருமானத்தில் தான் பிள்ளைகளை கவனித்து வந்தார் வைஷாலி. இந்நிலையில் இலக்கிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு வைஷாலி பிரமாதமாக பேசினார். இதை பார்த்த பிரஹர் ஜனசக்தி கட்சியின் எம்.எல்.ஏ ஓம் பிரகாஷ் அவரின் திறமையை பார்த்து வியந்து அந்த கட்சியின் சார்பில் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தேர்தல் செலவுகள், பிரசார செலவுகளுக்கு தனக்கு பணம் வேண்டும் என வாட்ஸ் மூலம் வைஷாலி கோரிக்கை வைத்தார். இதையடுத்து அவருக்கு நிதியுதவி குவிந்தது. இதுவரை ஒன்றரை லட்சம் ரூபாய் அவருக்கு கிடைத்ததுள்ளது.

வைஷாலி கூறுகையில், நான் தேர்தலில் போட்டியிடுகிறேன், இது எனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாகும். விவசாயிகளின் பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது என் எண்ணம் என கூறியுள்ளார்.