வீட்டுக்குள் புகுந்து கல்லூரி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞன்: பொறியியல் மணாவிக்கு நடந்த கொடூரம்

திருச்சூர், சியாராம் பகுதியில் வசித்து வரும் நீத்து (21) எனும் பொறியியல் கல்லூரி மாணவி. இன்று காலை 7 மணியளவில் அவரது வீட்டுக்குள் புகுந்த ஒருவன் அவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீத்துவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உதவிக்கு வரும் முன் அவர் இறந்துவிட்டார். வடக்கேகட் பகுதியை சேர்ந்த நிதிஷ் என்பவன் இந்த செயலை செய்துள்ளான். சம்பவ இடத்தை விட்டு அவன் தப்பிக்கும் முன்பு, அங்கிருந்தவர்கள் அவனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காவல்துறை அளித்துள்ள அறிக்கையின்படி, நீத்துவை எரிப்பதற்கு முன்பு அவன் கத்தியால் குத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

நீத்து கொடகராவில் உள்ள ஆக்சிஸ் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி. அவரது அம்மா சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார், அப்பா மறுமணம் செய்து கொண்டுள்ளார். நீத்து சியாராம் பகுதியில் தன் அத்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வந்திருக்கிறார். வீட்டுக்கு வெளியே பைக்கை நிறுத்திவிட்டு, பின்புறமாக சென்று நீத்துவை கொலை செய்திருக்கிறார்.

நீத்துவின் உடல் உடனடியாக திருச்சூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து மேற்படி விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் கவிதா விஜயக்குமார் என்ற கல்லூரி மாணவியை அஜின் ரெஜி மேத்யூ என்பவன்

நடுரோட்டில் பெட்ரோல் எரித்த சம்பவத்தை தொடர்ந்து இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்க துவங்கியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*