பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும், ‘தேவதையை கண்டேன்’ தொடரில் இருந்து விலக உள்ளதாக, அந்த தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஷாமிலி நாயர் தெரிவித்துள்ளார். இதனை உறுதி படுத்தும் விதமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ‘தேவதையை கண்டேன்’ சீரியல் மூலம் தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து ரசிகர்களும் நன்றி. இதுவரை 375 எபிசோடுகளில் நடித்துள்ளேன். தற்போது என்னால் இந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. ஒரு சிறு பிரேக் தேவைப்படுவதால், விலகுகிறேன்.
மீண்டும் வருவேன், அப்போதும் இதே போன்ற ஆதரவை நீங்கள் கொடுக்க வேண்டும் என, அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ பதிவு இதோ