சைக்கோவாக மாறிய ஒரு தலை காதலன்..திருமணம் ஆன பின்னரும் ஆசை! பொள்ளாச்சியில் இறந்து கிடந்த மாணவி சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்

தமிழகத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த இளம் பெண் சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிரகதி என்ற கல்லூரி மாணவி கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவரை நேற்று முன் தினம் முதல் காணவில்லை என்று அந்த மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். இதையடுத்து பொள்ளாச்சி- தாராபுரம் சாலையில் உள்ள ஏ நாகூர் பகுதியில் இளம்பெண்ணின் சடலம் அரை நிர்வாணத்துடன் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பின் அங்கு விரைந்த பொலிசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அது மாயமான ஒட்டன்சத்திரத்தை சேர்த்த கல்லூரி மாணவி என்பது தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்பேரில் சதீஷ் என்பவரை பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ் யார் என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சதீஷ், மாணவியின் தூரத்து உறவினர் என்பது தெரியவந்துள்ளது. மாணவி பள்ளி படிக்கும்போதே சதீஷ், மாணவியின் வீட்டில் பெண் கேட்டுள்ளார்.

அதற்கு பிரகதி பள்ளி தான் படிக்கிறார். இப்போது திருமணம் செய்துவைக்க முடியாது என பெற்றோர் மறுத்துள்ளனர். இருப்பினும் அவருக்கு பிரகதியை அடைவதில் தீவிரமாக இருந்துள்ளார். இதற்கிடையில் அவருக்கு திருமணமும் ஆகியுள்ளது திருமணம் ஆன பின்பும் கூட, பிரகதியை பெண் கேட்டு மீண்டும் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, பெற்றோர்கள் வற்புறுத்தியதாலேயே இன்னொரு பெண்ணை திருமணம் செய்ததாகவும், பிரகதியை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படியும் பிரகதியின் பெற்றோரிடம் சதீஷ் கேட்டுள்ளார்.

ஆனால் இந்த முறையும் சுதாவின் பெற்றோர், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். எப்படி திருமணம் ஆனவருக்கு மகளை கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பினர். இதனிடையே பிரதிக்கு, அவர் விரும்பிய இளைஞருடன் கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் தான் பிரகதி கல்லூரி விடுதியை விட்டு வழக்கம்போல வீட்டிற்கு செல்ல வந்த நிலையில் காணமல் போயுள்ளார், அதன் பின்னரே அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*