பிரசவத்திற்கு வந்த சிறுமியின் வயதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்: நெஞ்சை உருக வைக்கும் பின்னணி

பெற்றோரை இழந்த சிறுமிக்கு வாழ்க்கை கொடுத்து கர்பிணியாக்கிய இளைஞரை கைது செய்யலாமா? என பொலிஸார் பெரிதும் குழம்பியுள்ளனர். சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 16வயது சிறுமி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை 22 வயது வாலிபர் உடன் இருந்து கவனித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமியின் வயதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துளள்னர். அதன்பேரில் மருத்துவமனைக்கு வந்த பொலிஸார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதற்கு அந்த சிறுமி, பெற்றோரை இழந்த பின்னர் ஆதரவு கொடுக்கும் எண்ணத்தில் தான் அந்த இளைஞர் என்னை திருமணம் செய்துகொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே இரவு, பகலாக பக்கத்தில் இருந்து கவனித்து வருகிறார் என கூறியுள்ளார். இதனை கேட்டு மனமுடைந்த போன பொலிஸார்,

போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை கைது செய்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமிக்கு ஆதரவாக யாரும் இல்லை என்பதை விசாரணையில் தெரிந்துகொண்டனர்.

இந்த சூழ்நிலையில் அந்த பகுதி மக்களும் அந்த இளைஞருக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர் ஆகையால் இளைஞரை கைது செய்யலாமா? என குழம்பிய பொலிஸார் உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*