காது வலியால் துடித்த இளைஞர்… ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி: பின்னர் நடந்த பகீர் சம்பவம்.!! அனைவரும் கண்டிப்பாக படிக்கவும்

பிரித்தானியரான 31 வயது நபர் கடந்த 5 ஆண்டுகளாக காது வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவ சிகிச்சையும் பெற்றுவந்துள்ளார். ஆனால் அடிக்கடி அவருக்கு காது வலி ஏற்பட்டவாறே இருந்துள்ளது. இதுகுறித்து அலட்டிக்கொள்ளாத அந்த நபர் வலி ஏற்படும்போதெல்லாம் மருத்துவர்களை சந்தித்து சிகிச்சைபெற்றுள்ளார். இந்த நிலையில் அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது தலை பாரமாகவும், கடுமையான வலியும் தந்துள்ளது. மட்டுமின்றி திடீரென்று ஞாபக சக்தியும் இழந்துள்ளார். உறவினர்கள் நண்பர்கள் பெயரையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறினார். இந்த நிலையில் திடீரென்று ஒருநாள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அவசர் உதவிக் குழுவினரின் உதவியை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

தொடர்ந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரை மருத்துவர்கள் தீவிரமாக பரிசோதித்தனர். அதில் செல்-உண்ணும் பாக்டீரியாவால் அவரது தலைப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர். இதற்கு காரணமாக மருத்துவர்கள் குறிப்பிடுவது, அந்த நபர் பயன்படுத்திய காட்டன் பட்ஸ் தான் என தெரிவித்துள்ளனர். மேலும், அந்த நபரின் காதுக்குள், அவர் பயன்படுத்திய காட்டன் பட்ஸின் இழைகளும் சிக்கியிருந்துள்ளது. தொடர்ந்து 8 வார சிகிச்சைக்கு பின்னர் அந்த நபர் குணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*