வெளிநாட்டில் அதிகாலை 3 மணிக்கு இந்திய இளைஞர் செய்த செயலுக்கு சிறை தண்டனை விதிப்பு: என்ன தவறு செய்தார்?

இந்தியாவை சேர்ந்தவர் ஜீவன் அர்ஜூன் (29). இவர் சிங்கப்பூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்தாண்டு தீபாவளி தினத்தன்று ஜீவன் அதிகாலை 3 மணியளவில் வீட்டு முன் பட்டாசுகளை வெடித்துள்ளார். சுமார் 5 நிமிடம் பயங்கர சத்தத்துடன் நடந்த இந்த வானவேடிக்கை அக்கம் பக்கத்தினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படாத நிலையில், எந்தவொரு பொருளுக்கும் சேதமும் ஏற்படவில்லை இது தொடர்பாக ஜீவன் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நேற்று இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி, குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் பட்டாசு வெடித்தது தவறாகும். இது மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த குற்றத்துக்காக ஜீவனுக்கு 3 வார சிறை தண்டனையும், 5,000 சிங்கப்பூர் டொலர்கள் அபராதமும் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*