சற்றுமுன் பிரபல நடிகர், அரசியல் பிரமுகர் திடீர் மரணம்! குடும்பத்தினர் அதிர்ச்சி – திரையலகம் சோகம்

ஜே.கே ரித்திஷ் காணல் நீர், நாயகன், பெண் சிங்கம்,ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்கேஜி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2009 மக்களவை தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கடந்த 2014-ல் திமுக-வில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார்.  ராமநாதபுரம் மாவட்டதில் மக்களவை தொகுதி வேட்பாளர் நாகேந்திரனை ஆதரித்து கடந்த 2 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார்.

ராமநாதபுரத்தில் தங்கியிருந்தார்.இந்நிலையில் இன்று மதிய உணவு சாப்பாடு இடைவேளையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.