தல அஜித் வீட்டின் வாட்ச்மேன் இவர் தான்..சமூகவலைத்தளங்களை அதிரவைக்கும் புகைப்படம்

தமிழ் திரையுலகில் இப்போது இருக்கும் மிகப் பெரிய நடிகர்களில் தல அஜித்தும் ஒருவர். இவர் எவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றிருந்தாலும், அதை அவர் ஒரு போதும் வெளியில் காட்டியதே இல்லை. பல கோடி சம்பாதிக்கும் அஜித் இன்னும் சாதரண போனே பயன்படுத்துகிறார். அதே போன்று அவரது மனைவி ஷாலினியும் ஒரு சாதரண மொபைல் போனை வைத்திருந்ததை சமீபத்தில் பார்க்க முடிந்தது. இந்நிலையில் தல அஜித்தின் மனைவி ஷாலினி தன் மகன் மற்றும் மகள் அனோஸ்காவுடன் வாட்ச்மேன் படத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அவ்வளவு குட்டிப் பொண்ணாக இருந்த அனோஸ்காவா இப்படி இவ்வளவு பெரிய பெண்ணாக இருக்கிறார் என்றளவிற்கு வளர்ந்துவிட்டார். அதுமட்டுமின்றி படத்திற்கு வந்த போது அஜித் மகள் அனோஸ்கா தன் வீட்டில் வளர்க்கும் நாயையும் அழைத்து வந்துள்ளார். வாட்ச்மேன் படம் நாயை மையமாக வைத்து எடுக்கப்பட்ட த்ரில்லர் படம் என்பதால், அவர் நாயுடன் வந்ததாக கூறப்படுகிறது.வைரலாகும் அந்த புகைப்படம் இதோ