ஸ்டாலின் குரலைக் கேட்டு ஆத்திரம்! டார்ச் லைட்டை வீசி டிவியை உடைத்த கமல்! ஆவேச வீடியோ உள்ளே!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக அதிமுக ஆகிய கட்சிகள் வாக்காளர்களை கவர விதவித மாக விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகர் கமலின் மக்கள் நீதி மையம் கட்சியும் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் தொலைக்காட்சி ஒன்றை நடிகர் கமல் கவனித்துக் கொண்டிருக்கிறார். அப்போது கலைஞரின் மகனாக சொல்கிறேன் என்று ஸ்டாலின் கூறுவது அந்த டிவியில் ஓடுகிறது. இதேபோல் தினகரன் ஓபிஎஸ் மற்றும் ஹெச் ராஜா பேசுவதும் அந்த டிவியில் ஒளிபரப்பாகிறது.

இதனைப் பார்த்து எரிச்சலடையும் கமல் தனது கையில் வைத்திருக்கும் தனது கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை வீசி அந்த டிவியை உடைக்கிறார். இதன் பிறகு ஏன் மக்கள் நீதி மையத்தில் வாக்களிக்க வேண்டும் என்று நீண்ட பிரசங்கம் ஒன்றையும் செய்கிறார் கமல். அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*