கத்தியை காட்டி பாலியல் வல்லுறவுக்கு முயற்சி! இளம் பெண் கூறிய ஒரே ஒரு வார்த்தை! தெறித்து ஓடிய கொடூரன்!

அவுரங்கபாத் மாவட்டம் ராஜ்நகரை சேர்ந்த 29 வயது இளம்பெண் கடந்த மார்ச் 25-ஆம் தேதி தனது 7 வயது மகளுடன் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். ஷானூர்மியா தர்கா அருகே அவர் ஷேர் ஆட்டோவுக்காக நின்று கொண்டிருந்த போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் கிஷோர் விலாஸ் என்ற 22 வயது இளைஞன் அவர்கள் இருவரையும் கொண்டு விடுவதாகக் கூறியதை நம்பி தனது மகளுடன் அந்தப் பெண் இரு சக்கர வாகனத்தில் ஏறினார்.

ஒதுக்குப்புறமான இடத்தில் வண்டியை நிறுத்திய அவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் முதலில் செய்வதறியாமல் திகைத்த போதும். பிறகு அந்தப் பெண்ணுக்கு ஒரு யோசனை தோன்ற அதனை செயல்படுத்தினார். அந்த இளைஞனிடம் தான் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்று அந்தப் பெண் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவன் அவர்களை விட்டுவிட்டு தலைத்தெறிக்க ஓடினான். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண் அவன் ஒட்டியிருந்த டாட்டு அடையாளத்தையும் கூறினார்.

அதன் பேரில் அவனை கைது செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ராஜ்நகர் என்ற இடத்தைச் சேர்ந்த அவன் ஏற்கனவே தனது தந்தையை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளியே வந்திருந்தது தெரியவந்தது.