கணவனுக்கு பயந்து டெல்லியைத் தேர்வு செய்த பிக் பாஸ் நித்யா! எதுக்குனு தெரியுமா?

தமிழகத்தில் கடந்தாண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் 2 மூலம் பிரபலமானவரும், காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவியுமான நித்யா சமீபத்தில் ’தேசிய பெண்கள் கட்சியில்’ இணைந்தார். அந்தக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் அந்த கட்சி சார்பாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார். இது குறித்து பேட்டி அளித்த நித்யாவிடம் தமிழகத்தை விட்டுவிட்டு ஏன் டெல்லியில் போட்டியிடுகிறீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நித்யா ‘காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிடலாம் என்று தான் நான் முடிவு செய்திருந்தேன்.

ஆனால் நான் தமிழ்நாட்டுல எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும், அங்க போய் என்னைப் பத்தி அவதூறு பரப்பணும் பாலாஜி பிளான் பண்ணிருக்காரு. ஒரு முறை டெல்லியில் உள்ள எங்களோட தேசியக் கட்சியின் நிர்வாகிகளுக்கே குடிச்சுட்டுப் போன் பண்ணி, ‘அவளெல்லாம் கட்சித் தலைவியா’னு கேட்டு பிரச்னை செஞ்சி இருக்காங்க.

ஆனால் இவர் சொன்ன எதையும் கண்டுக்காம, எங்க கட்சியின் தலைநகர் நிர்வாகிகள் தான் என்னை டெல்லியில் போட்டியிட அறிவுறுத்தினார்கள். வடக்கு டெல்லியில்  தமிழர்கள் அதிகம் வசிப்பதால்

எனக்கு சாதகமா இருக்கும்கிற நம்பிக்கை இருக்கு. அதனால சரின்னு சொல்லிட்டேன். அடுத்த சில நாள்களில் டெல்லி போய் தேர்தல் வேலைகளைத் தொடங்கிடுவேன்’ என்று கூறியுள்ளார்.