அபுதாபியில் இருந்து வந்த ஆண் தோழன்! ஆசை ஆசையாக சென்ற பெண் தோழி! பிறகு நேர்ந்த கொடூரம்!

தனது தோழியுடன் அந்தப் பெண் இரு சக்கர வாகனத்தில் அந்தப் பெண் வந்த நிலையில் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் இருவரையும் தடுத்து நிறுத்திய முகமூடி அணிந்த மர்ம இளைஞன் இருவர் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொல்ல முயன்றான். ஆனால் அக்கம்பக்கத்தவர்கள் சூழ்ந்ததையடுது அவன் தப்பியோடினான்.  பெண்கள் இருவரும் சிறு காயங்களுடன் தப்பிய போதும் தப்பியோடிய இளைஞனை கண்டுபிடிக்க முடியவில்லை. பெட்ரோல் கொண்டு வந்த காலி பாட்டிலைத் தவிர வேறு தடயங்களும் சிக்கவில்லை  கொலை முயற்சி நடந்த இடத்தில் மக்கள், வழிப்போக்கர்கள் என 200-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போன் கால்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை க் கொண்டு அந்த நபரின் பைக் உள்ளிட்ட விவரங்களைக் கண்டுபிடித்த போலீசார், அது கொலை முயற்சிக்குள்ளான இளம்பெண்ணின் நண்பனும் உறவினனுமான மானு என்பதும் அவன் அபுதாபியில் வேலை பார்த்து வருவதையும் கண்டு பிடித்தனர்.

துபாய் அதிகாரிகள் உதவியுடன் மானுவை கேரளாவுக்கு கொண்டுவந்த போலீசார் அவனிடம் உரிய முறையில் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மானுவும் இளம் பெண்ண்ணும்  ஊட்டியைச் சேர்ந்தவர்கள் என்றும் உறவினர்கள் என்றும்  தெரிய வந்தது. சிறு வயது முதலே இருவரும் ஒன்றாகப் பழகி வந்த நிலையில் இளம் பெண் கொச்சியில் படித்துக்கொண்டே பகுதி நேர வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மானுவிடம் பழகுவதை அண்மைக்காலமாக இளம் பெண் தவிர்த்து வந்த நிலையில் அவர் வேறு யாரையோ காதலிக்கக் கூடும் என்ற சந்தேகம் மானுவுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அபுதாபியில் வேலை கிடைத்து அங்கு சென்ற மானுவுக்கு சந்தேகம் மட்டும் அரித்துக் கொண்டேயிருக்க இளம் பெண்ணை கொலை செய்ய  திட்டமிட்டான்.

தடயமின்றிக் கொலை செய்யும் திட்டத்துடன்  பெங்களூரு விமான நிலையம் வந்து, அங்கிருந்து கோவை வந்த அவன் அங்கிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கொச்சி வந்ததும் ஆனால் கொலை முயற்சி தோல்வியில் முடிந்ததையடுத்து மீண்டும் அபுதாபிக்கே சென்றதும் தெரிய வந்தது.