அருகருகே படுத்து உறங்கிய 6 மகள்கள்! உடன் படுத்திருந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த பயங்கரம்!

மும்பையின் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரகூப் கான் . பழம் பொருள் விற்பனைக் கடை நடத்தி வந்த இவருக்கும் இவரது மனைவி அஜ்மத்துன்னிசாவுக்கு 6 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அஜ்மத்துன்னிசாவுக்கு மற்றொரு பழம் பொருள் விற்பனைக் கடைக் காரருடன் தவறான தொடர்பு இருந்ததாக் முகமது ரகூப் கான் சந்தேகப் பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை தனது 6 மகள்களும் தனது மனைவியின் தங்கையும் உறங்கிய பின் ரகூப் கான் தனது மனைவியிடம் சந்தேகம் தொடர்பாக தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. தான் குற்றமற்றவர் எம் அஜ்மத்துன்னிசா கூறியதை ஏற்காமல் ரகூப் கான் மனைவியை முகத்தில் குத்தியதாகவும், எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அஜ்மத்துன்னிசா வலி தாங்காமல் கூக்குரலிட

அவரது வாயை தனது இறுக மூடியதோடு கழுத்தையும் நெறித்ததில் அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர் . மனைவி இறந்ததைத் தொடர்ந்து தானே போலீசாரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சரண் அடைந்தார். அதன் பேரில் போலீசார் அவரைக் கைது செய்தனர். அதுவரை நடந்தது தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்த மகள்கள் உள்ளிட்ட அனைவருக்கும் போலீசார் வந்து ரகூப் கானை கைது செய்து அழைத்துச் சென்றபோதுதான் நடந்தது தெரியவந்தது.