கேரளத்து பைங்கிளிகளின் ரகசியம் அம்பலம்! வியக்கும் தமிழர்கள்… ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்

கேரளா என்றாலே கடவுளின் பூமி என்று கூறுவர். ஆனால், சிலர் கேரளாவை தேவதைகளின் பூமி என்றே அழைக்கின்றனர். காரணம், இங்குள்ள அழகு நிரம்பிய பெண்களும் ஆண்களும் தான். மற்ற மாநிலத்து பெண்களுக்கும் ஆண்களுக்கும் கேரளத்து மக்கள் மீது எப்போதும் ஒரு தனி ஈர்ப்பு இருக்கத் தான் செய்கிறது. இது இன்று நேற்று வந்த ஈர்ப்பு கிடையாது. பல ஆண்டுகளாக கேரள படங்களில் நடக்கும் கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளின் மீது எப்போதுமே ஒரு கண் இருந்தே வருகிறது. இவர்கள் இத்தனை பேரழகுடனும் இருப்பதற்கும், எடுப்பான உடல் வாகுவை பெற்றுள்ளதற்கும் என்ன காரணம் என நீண்ட நாட்களாக ஒரு புதிர் இருந்து வருகிறது. இதற்கு பின் இத்தனை காலமாக மறைந்திருந்த ஒரு இரகசியம் இந்த பதிவின் மூலம் வெளியாக உள்ளது. கேரள மக்கள் இத்தனை சிறப்புடன் இருக்க என்ன காரணம் என்பதை தமிழ் பெண்களே இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிறப்புகள்
பொதுவாக இன்றைய கால கட்டத்தில் தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு கேரள நடிகர் மற்றும் நடிகைகளின் மீது மிகவும் ஆழமான ஈர்ப்பு வந்துள்ளது. சமீப காலங்களில் சாய் பல்லவி மீது வந்த இதே ஈர்ப்பு தான் நயன் மீது பல வருடத்திற்கு முன்னரே வந்து விட்டது. இதே போன்று மம்முட்டி, மோகன் லால், துல்கர் சல்மான், நிவின் பாலி போன்ற நடிகர்களையும் சொல்லலாம்.

நடனம்
பெரும்பாலும் கேரள மக்கள் நடனத்தை தங்களது உடல் நலத்தை பாதுகாக்க பயன்படுத்தி கொள்கின்றனர். உடல் சிக்கென்று இருக்கவும், நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்கவும் நடனம் இவர்களுக்கு உதவிக்கிறதாம். பத்தில் 6 கேரள பெண்களுக்கு நன்றாக நடனமாட தெரியும் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஆயுர்வேதம்
கேரள மக்கள் குடிக்கும் நீரில் இருந்து சாப்பிடும் உணவு வரை எல்லாவற்றிலும் ஆயுர்வேதம் உயிர் மூச்சு போல கலந்திருக்கும். இயற்கை முறையிலான உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பயிற்சி ஆகியவை தான் இவர்களின் அதிக ஆரோக்கியத்திற்கு காரணமாம்.

அரிசி
கேரளாவில் பயன்படுத்தப்படும் நவார அரிசி பல்வேறு மருத்துவ குணம் கொண்டது. அதே போன்று சற்று அகலமாக இருக்க கூடிய கேரளா அரிசியும் நீண்ட ஆயுளை தர கூடும். இவர்களின் சில பிரதான உணவு முறை தான் எடுப்பான உடல் அழகை இவர்களுக்கு தருகிறது.

உணவு
வகைகள் கேரளாவின் மீன் கறி முதல் அப்பம் வரை எல்லாமே அதிக பிரசித்தி பெற்றவை தான். முக்கியமாக வேக வைத்த அரிசி, காரசாரமான குழம்பு, சாம்பார், அப்பளம், புளியம், புட்டு, மோர் குழம்பு, பாயசம் போன்றவை அதிக ஆரோக்கியம் நிறைந்தவையாக உள்ளது.